கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இன்று (28) அதிகாலை 7.30 மணி அளவில்வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்த வேளையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின்ஒழுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபர் மரணமடைந்துள்ளார்.
முறையற்ற வகையில் சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு மின் இணைப்பு வழங்கியதனால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குதி உத்திர பொங்கலிற்கு செல்வதற்காகவே இவர் வாகனத்தை கழுவியுள்ளார்.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1