நேற்று 278 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,839 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்களில் 260 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள் 18 பேர்.
அதன்படி 2,892 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, 243 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,388 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 270 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1