அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலபிட்டிய பிரதேசத்தில் மாணிக்கல் அகழும் குழியில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலையால் குறித்த மாணிக்கக் கல் குழிக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் இதன்போதே குழிக்குள் சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 மற்றும் 45 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.