29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
விளையாட்டு

அக்கரைப்பற்று சன்றைஸ் இளைஞர் கழகம் கரம் போட்டியில் சோடி மற்றும் தனிப்பிரிவுகளில் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று கரம் நிலையத்தில் இன்று 28ம் திகதி  நடைபெற்றது.

கழகங்களுக்கிடையிலான இறுதி சுற்றுப்போட்டியில் சன்றைஸ் இளைஞர் கழகமும் ஹிஜ்ரா இளைஞர் கழகமும்  தனி மற்றும் இரட்டையர் போட்டிகளில்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் முதலாம் இடத்தினை இரு பிரிவுகளிலும் சன்றைஸ் இளைஞர் கழகம் பெற்றதுடன் மாவட்ட மட்ட இளைஞர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற புள்ளிவிபரத்திணைக்கள உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான ஐ. எல். சரிப்டீன், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!