முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (26) இந்த சம்பவம் நடந்தது.
இம்மாதம் 13ஆம் திகதியும் இதே வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியிருந்தது. மீண்டும் நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதம் 13ஆம் திகதி, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவும் குறித்த வீட்டுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழுவினர் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதோடு, வீட்டில் இருந்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.