கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பங்குனி உத்திர பொங்கல் விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகளின்படி 100 இற்கும் குறைவான பக்தர்களின் பங்குபற்றலுடனேயே பொங்கல் விழாவை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்திற்கும், கண்டாவளை பிரதேச செயலாளருக்குமிடையில் இன்று நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளைய பங்குனி உத்தர பொங்கல் விழாவில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பரிசோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுவார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1