யாழ்ப்பாணம், கொக்குவிலில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுளளார். கைத்தொலைபேசி வாங்கித் தராததாலேயே இவர் தவறான முடிவெடுதததாக கூறப்படுகிறது.
தாவடி தெற்று, கொக்குவில் மத்தியை சேர்ந்த செல்வராசா ஜதுர்சன் (19) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, இவரது கைத்தொலைபேசி நிலத்தில் விழுந்து உடைந்துள்ளது. இதையடுத்து, புதிய கைத்தொலைபேசி வாங்கித்தருமாறு வீட்டில் கேட்டதாக கூறப்படுகிறது.
வீட்டில் தொலைபேசி வாங்கிக் கொடுக்காததால் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டது.
யாழ் போதனைா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை நடத்தி, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
1
+1
+1