ஏப்ரல் முதல் நிர்ணய விலையில் அரிசி கிடைக்கும்!

Date:

ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள், பிரதான விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோவை 95 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோவை 97 ரூபாவிற்கும், சம்பா அரிசியை 93 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சதொச தலைவர், மொத்த கூட்டுறவு விற்பனை நிறுவன ஆணையாளர், பிரதான நிலை விற்பன நிலையங்களின் பிரதானிகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் விவசாயத்துறை அமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியின் நிர்ணய விலையினை பேணுவது சலால்மிக்கதாக உள்ளது. அரிசியின் விற்பனை விலை தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டாலும் அவற்றை முறையாக பின்பற்ற முடியாத தன்மை காணப்படுகிறது.

கடந்த காலங்களில் அரிசி உற்பத்தியாளர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக அரிசி விற்பனை விலையில் மாறுப்பட்ட தன்மை ஏற்பட்டது.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு கூடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக அரிசி விலையின் நிர்ணய தன்மையினை உறுதியாக பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோ 95 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோ 93 ரூபாவிற்கும் சதொச, மொத்த கூட்டுறவு விற்பனை நிலையங்கள், கார்கில் பூட் சிட்டி உட்பட பிரதான நிலைய விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் உள்ள 2500 மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள், 447 சதொச விற்பனை நிலையங்கள், மற்றும் பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கு 3 மாத காலத்துக்கு தேவையான அரிசி நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக விநியோகிக்கப்படும்.

நாட்டில் அரசி விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது. 6 மாத காலத்துக்கு தேவையான அரிசி போதுமான அளவிற்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகிறது. இதில் 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் செய்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நாடு தழுவிய ரீதியில் நடவடிக்கை விவசாய திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்