25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

ஜெனீவா அழுத்தத்திற்கு அஞ்சோம்; மஹிந்தவை தோற்கடித்ததை போல மீண்டும் செய்து விடாதீர்கள்: கோட்டா!

ஜெனீவா அழுத்தத்திற்கு நாம் அச்சமின்றி முகம்கொடுப்போம். அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாங்கள் பலியாக மாட்டோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (27) முற்பகல் மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தற பிரதேச செயலகப் பிரிவில் கிரிவெல்கெலே வடக்கு கிராம சேவகர் பிரிவில் தேரங்கல மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் 16வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இது அரசாங்கத்தைப் போன்றே அதிகாரிகளுடையவும் பொறுப்பு. நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பயனுள்ள முறையில் வலுப்படுத்தும் அதேநேரம் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளோம் . கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள் ஒருபோதும் ஆட்சியில் இருக்காதவர்களைப் போன்று இன்று பேசுகிறார்கள். ஈஸ்டர் தாக்குதல், எம்.சி.சி ஒப்பந்தம், கிழக்கு முனைய சிக்கல்கள் அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினைகள். இப்போது அவர்கள் எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எதிர் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாற்றமடைவதால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய முடியாது.

அன்று கொழும்பு நகரம் பசுமை நகரமாக உருவாக்கப்பட்டது. 2030 அளவில், 70% சக்தி வளத் தேவைகள் மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்ட சூரிய சக்தி அமைப்புகளிலிருந்து பிரதான மின் கட்டத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரசாயன உரங்களின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 25% குறைக்கப்படுகிறது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்கள்.

இந்த முன்னேற்றங்களை சகித்துக்கொள்ளமுடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் மாஃபியா குழுக்களும் பொய்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

என்ன செய்யப்படுகிறது என்பதை சரியாக பார்க்காமல் தவறான கருத்துக்களினால் ஏமாற்றமடைந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சேதம் மீண்டும் நிகழலாம். முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து செய்த தவறை மீள செய்யக்கூடாது. அப்படி நடந்தால் அந்த சேதத்தை சரிசெய்வது எளிதானதல்ல.

கடந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதன் விளைவாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை சிதைந்தது. பழக்கப்பட்ட யானைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தி கலாச்சாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வந்தபோது நாடு பெரும் நெருக்கடியில் மூழ்கியது. அவற்றுக்கு இன்று தீர்வுகள் வழங்கப்படுகின்றது.

அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்கி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள் ஒருபோதும் ஆட்சியில் இல்லாதது போல் இன்று பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசுவது எனது கொள்கை அல்ல என்றாலும், உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

Leave a Comment