நாட்டில் நேற்று 271 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,289 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 251 நபர்கள் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 20 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று, 251 நபர்கள்தொற்றிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,881 ஆக உயர்ந்தது.
தற்போது 2,851 நபர்கள் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 406 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1