புதிய அரசியலமைப்பிற்பான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பரிந்துரைகள் இன்று ஒப்படைக்கப்படும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பிற்கான பரிந்துரைகளை வழங்க, கடந்த ஓகஸ்ட் மாதம் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் பரிந்துரைகள் இன்று வழங்கப்படும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு நேற்று மாலை கூடிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.