திருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19, 800 லீட்டர் பெற்றோல் எடுத்துச் சென்ற பவுஸரே விபத்திற்குள்ளானது.
பவுசர் விபத்துக்குள்ளானதால் எரிபொருள் கசியத் தொடங்கியதனையடுத்து எரிபொருள் வேறு வாகனத்திற்கு மாற்றியதாகவும் இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்குள்ளானதும், எரிபொருள் வழிந்தோட தொடங்கியதும் பிரதேசவாசிகள் போட்டி போட்டுக்கொண்டு எரிபொருளை எடுத்துச் சென்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2