நிலாவறையில் தொல்பொருள் திணைக்களம் மீண்டும் அகழ்வு?: திடீர் பதற்றம்!

Date:

யாழ்ப்பாணம் நிலாவறை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் மீளவும் பணியை ஆரம்பித்துள்ளனர். அந்த பகுதியில் நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவதால் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நிலாவறை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பகுதியென அடையாளமிடப்பட்ட பகுதியில் இன்று துப்பரவு பணியில் ஈடுபடவுள்ளதாக நேற்று, வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு, தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும்,அதை எழுத்துமூலம் வழங்கும்படி தி.நிரோஷ் கேட்டிருந்தார்.

எனினும், எழுத்துமூலம் தகவல் வழங்காமல் இன்று தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு பணியை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் நிலத்தை அகலும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ் நின்று நிலைமையை அவதானித்து வருகிறார். அவரை மிரட்டும் பாணியில் புலனாய்வாளர்கள் வீடியோ படம் பிடித்து வருகிறார்கள்.

மா.கலையமுதன் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் அங்கு சென்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்