54 இந்திய மீனவர்கள் கைது!

Date:

கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன்
இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (24)  அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில்
ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு றோலர் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், இருபது மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று (25) கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளனர்.

அவர்களை ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சற்று முன்னர் இலங்கை கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு கடற்பரப்புக்களில் நேற்று இரவு  5 படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: கோட்டாபயவின் மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவித்த உயர்நீதிமன்றம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக்...

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 6.5...

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்! 2027 முதல் நெருக்கடி ஏற்படலாம் என எச்சரிக்கை

அரசாங்கத்தின் தற்போதைய மின்சக்திக் கொள்கைகள் தொடருமானால், 2027ஆம் ஆண்டு முதல் இலங்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்