யாழில் இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் தொற்றாளர்கள்: நவீன சந்தை கொத்தணியில் மட்டும் 77 பேருக்கு தொற்று!

Date:

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (25) பதிவாகும் என தமிழ்பக்கம் அறிகிறது.

யாழ் நகரிலுள்ள புதிய சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் மட்டும் இன்று 77 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது. புதிய சந்தைக்குள் தொற்று உறுதியானதை தொடர்ந்து, நேற்று சந்தை மூடப்பட்டு வர்த்தகர்களிடம் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்கள் உள்ளிட்ட குடும்பங்களிடமும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதில், 77 பேர் இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தவிர, திருமண வீடொன்றுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட இன்னும் சிலரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று மாலையே இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகும்.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்