சாவகச்சேரியில் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பாக உள்ள காப்பெற் வீதியின் மேல்பரப்பில் கொங்கிறீட் இட்டு வீதியை சேதமாக்கியுள்ளார்.
சாவகச்சேரி, சங்கத்தானை, இத்தியடிப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள நகரகசபைக்கு சொந்தமான காப்பெற் வீதியையே இவ்வாறு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கொங்கிறீட் கலவையிட்டுள்ளார்.
தனது வீட்டு மதிலோடு இணைத்து வீதியின் முக்கால்வாசிப் பகுதியை காப்பெற்றுக்கு மேலாக கொங்கிறீட் இட்டு வீதியின் சீரமைப்பை சேதத்துக்குள்ளாக்கியுள்ளார்.
குறித்த குடியிருப்பாளரின் செயற்பாட்டை சாவகச்சேரி நகரசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என வீதியில் பயணிப்போர் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் குடியிருப்பாளர்கள் சிலர் வீதியோடு இணைத்து கொங்கிறீட் போட்டமையினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.





