தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது மகனை அரசியலுக்கு அழைத்து வருவதற்காக திட்டமிடுவதாக அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய புரளியையடுத்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி குமரதுங்க தனது தந்தையையும் கணவனையும் மட்டுமல்ல, கண்களில் ஒன்றையும் இழந்ததால் மகனை இழக்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் வழியாக அண்மையில் நடந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தனது மகன் பங்களிப்பார் என்றும், அதற்கு அவருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1