நுவரெலியா மாவட்டத்தில் நகர் புறங்களில் தோட்டங்களை அண்டிய கோயில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் வழிபட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகளினால் சுகாதார அறிவுறுத்தல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.
கோயில் நிர்வாகக் குழுக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் வசிக்கின்ற பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் இந்த சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சுகாதார அறிவுறுத்தலுக்கமைவாகவே குறித்த கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களில் வழிபாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அதற்குமாறாக மேற்கொள்ளப்படுகின்ற வழிபாட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு குறித்த பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரமுண்டு என்பதாக விதுல சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் 50 பேருக்கு அதிகமானோரை சேர்க்காமை, வருகை தருகின்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேனல் மற்றும் பிற பிரதேசங்களிலிருந்து வருகின்றவர்களை வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளாமை போன்ற 12 விடயங்கள் அடங்கிய சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.