25 C
Jaffna
January 12, 2025
Pagetamil
சினிமா

‘தயாரிப்பாளருடன் படுக்கைக்கு கூப்பிட்டார்கள்’: பிரபல நடிகை பகீர் தகவல்!

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் அதிகம் இருப்பதாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் அங்கிதா லோகந்தேவும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பேசியிருக்கிறார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலியான அங்கிதா கூறியிருப்பதாவது,

நான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய படம் ஒன்றின் ஆடிஷனில் கலந்து கொள்ள அழைத்தார்கள். அப்பொழுது அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். அந்த அறையில் நான் தனியாக இல்லை. எனக்கு 19 அல்லது 20 வயது இருக்கும்.

உங்களின் தயாரிப்பாளருக்கு எந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்?. பார்ட்டிகளுக்கா அல்லது டின்னருக்கு செல்ல வேண்டுமா என்று நான் கேட்டேன்.

தயாரிப்பாளருடன் படுக்கைக்கு செல்ல வேண்டும் என்றார்கள். அதை கேட்ட நான் கோபம் அடைந்து, உங்கள் தயாரிப்பாளருக்கு படுக்க ஒரு பெண் தேவையே தவிர, படத்தில் வேலை செய்ய திறமையான பெண் தேவையில்லை என்று கூறிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்.

உடனே அந்த நபர் மன்னிப்பு கேட்டதுடன், உங்களை இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன் என்றார். நீங்கள் முயன்றாலும், இந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்றேன்.

நான் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியபோது ஒரு பெரிய நடிகர் கை குலுக்கினார். அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர் படுக்கையை எதிர்பார்த்து தான் அப்படி செய்தார் என்பது எனக்கு புரிந்து அவரிடம் இருந்து விலகிச் சென்றேன்.

சுஷாந்த சிங் ராஜ்புட்டால் நான் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்க மறுத்தேன். நான் சுஷாந்துக்காக இருக்க விரும்பினேன். அவருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். காதல் முறிவுக்கு பிறகே என் மதிப்பு எனக்கு தெரிந்தது.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு முறை எனக்கு போன் செய்து பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடிக்க கேட்டார். அவர் என்னை பாராட்டினார். சஞ்சய் சார் பாராட்டுவது பெரிய விஷயம். ஆனால் நானோ சுஷாந்தை திருமணம் செய்யப் போகிறேன், அதனால் நடிக்க முடியாது என்றேன்.

சுஷாந்தை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பினேன். அப்பொழுது எனக்கு கெரியரையும், பர்சனலையும் பேலன்ஸ் பண்ண தெரியவில்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

Leave a Comment