நடிகர் விருச்சிகாந்த் பழைய ஆட்டோ ஒன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
காதல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி எப்படியாவது சினிமாவில் முன்னேறி விடலாம் என்ற கனவுடன் வந்தவர்தான் விருச்சிகாந்த். காதல் படத்தில் அவரது காட்சியே அனைவருக்கும் விருப்பமான காட்சிதான்.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவர் சொன்ன வசனம் இன்று வரை சமூக வலைதளங்களில் பேமஸாக இருந்து வருகிறது. மேலும் பல மீம் கிரியேட்டர்ஸ்களும் அந்த வசனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
காதல் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்த விருச்சிகாந்த்துக்கு அதன்பிறகு படவாய்ப்புகளும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கூட கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் மட்டும் அந்த வசனத்தை சொல்லவில்லை. தன் வாழ்நாளிலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தது தான் அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டதாம்.
சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்த விருச்சிகாந்த் சமீபத்தில் ஒரு பழைய ஆட்டோ ஒன்றில் பிணமாக கிடந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.