26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

தொடரும் துயரம்: கடத்தப்பட்ட மகனின் கதி அறியாமல் மேலுமொரு தந்தை மரணம்!

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளார்.

வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா ரஞ்சனாமூர்த்தி (63) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான தற்போது 40 வயதாகும் செல்வநாதன் கடந்த 2007 ஆம் ஆண்டு தந்தைக்கு உணவுகொண்டுசெல்லும் போது வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1495 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

Leave a Comment