கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி, பல்லாவரம் அருகே பம்மல் ராமாபுரத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வகிறார். இவர், கடந்த 17ம் தேதி அன்று மை இந்தியா வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் அவர் வீட்டுக்கு வந்ததும், புதிய எண்ணில் இருந்த வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதை ஓபன் பண்ணி பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.
இதையடுத்து பரங்கிமலை சங்கர் நகர் துணை கமிஷனரிடம் சென்று புகார் அளித்தார். அந்த புகார் கடிதம் பரபரப்பாகியுள்ளது. காரணம், அதில் வீரலட்சுமி எழுதி்யிருந்த செய்தி அப்படி.
எனக்கு வீடியோக்கள் அனுப்பி மன உளைச்சலை தந்து என்னை பணி செய்ய விடாமல் செய்த அந்த நபரை மூன்று நாட்களில் பிடித்து வந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார்.
மேலும், போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால், நானே அந்த நபரை தூக்கி வந்து, பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுப்பேன். அதை அப்படியே சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று சபதமிட்டும் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஒரு பெண் வேட்பாளர் இப்படி அதிரடி காட்டி, முகநூலில் வெளியிட்ட இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.