எதிர்வரும் தமிழ் புத்தாண்டு பருவத்தில் பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கலாமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள், அதிக வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரி தயாரிப்புகளுக்கு தேவையான அனைத்து எண்ணெய் வகைகள்
மற்றும் மாஜரீனை இறக்குமதி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி,
பிரதமர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அந்த சங்கம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் மாஜரீனுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மற்ற அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. பேக்கரி உற்பத்தியாளர்கள் பல கோரிக்கைகளை வைத்தும் எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. எனவே பண்டிகை காலங்களில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.