பசறை, தொழும்புவத்தை, 3ஆம் கட்டை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை, எதரே வந்த கப் ரக வாகனம் மோதியது.
இதில் 72 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த அவரது மகளும், உறவினரான முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பசறை, பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பசறையில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1