27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

கொரோனா தொற்று 90,514 ஆக உயர்ந்தது!

நேற்று 314 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,514 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 258 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 85,904 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்த 40 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

2,905 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த  299 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,058 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 410 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

east tamil

துணைவேந்தர் இல்லாத 4வது பல்கலைக்கழகமாகியது கிழக்கு பல்கலைக்கழகம்!

Pagetamil

முகநூல் மோசடி – சந்தேக நபர் கைது

east tamil

பாதுகாப்பு முறையில் புரட்சி – சிறைகளுக்கு விசேட அணிகள்

east tamil

பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

east tamil

Leave a Comment