26.3 C
Jaffna
March 3, 2025
Pagetamil
சினிமா

கர்ணன் பட வழக்கு: நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜூக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில், நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜூக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் விதமாக இருந்ததாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ், பாடலை வெளியிட்ட திங் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் தற்போது பாடலை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்று இடைக்காலத்தடை விதிக்க கோரி வழக்கு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் பாடிய தேவா, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

Leave a Comment