27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேறியது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இலங்கைில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில், சமர்ப்பிக்கப்பட்ட A / HRC / 46 / L.1 தீர்மானத்தை இணை அனுசரணை நாடுகளின் சார்பாக ஜெனீவாவின் இங்கிலாந்து பிரதிநிதி ஜூலியன் ப்ரைத்வைட் முன்வைத்தார்.

உறுப்பு நாடுகள் உரையாடலில் பங்கேற்ற போது, சீன பிரதிநிதி வாக்கெடுப்பை கோரினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக கவுன்சிலின் 47 உறுப்பு நாடுகளும் நேரில் கலந்து கொள்ள முடியாததால், ஜூம் மூலம் ஒன்லைனில் வாக்களித்தனர்.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகிய அமெரிக்கா, இன்றைய வாக்கெடுப்புக்கு முன்னதாக தீர்மானத்தை வாய்மொழியாக ஆதரித்தது.

தீர்மானத்தை 22 நாடுகள் அங்கீகரித்தன.

ஆர்ஜென்ரினா, ஆர்மீனியா, ஒஸ்திரியா, பஹாமஸ், பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து, தென்கொரியா, உக்ரைன், பிரித்தானியா, அயர்லாந்து, உருகுவே ஆகிய 22  நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

சீனா, ரஷ்யா, பங்களாதேஷ், பொலிவியா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சோமாலியா, உஸ்பெக்கிஸ்தான், வெனிசூலா ஆகிய 11 நாடுகள் எதிராக வாக்களித்தன.

வாக்களிப்பை 14 நாடுகள் தவிர்த்தன. அவை, இந்தியா, பஹ்ரைன், புர்கினோ பார்சோ, கமரூன், காபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மவுரித்தேனியா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகியன வாக்களிக்கவில்லை.

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

Leave a Comment