Pagetamil
இலங்கை

பேஸ்புக்கில் மட்டும் போராட்டம் செய்ய வேண்டாம்: கோட்டா!

இந்நாட்டில் அனைத்து ஆறுகளையும் இவ்வருட இறுதிக்குள் சுத்தம் செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  சுற்றாடல் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஆறுகளை பாதுகாப்போம் வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்வதற்காக 2300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி பற்றாக்குறையானால் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேலதிக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றாடல் தொடர்பாக கதைப்பவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
சுற்றாடல் அழிவு சம்பந்தமான கருத்துக்கள் கொழும்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட செயற்பாடாகும். 10 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்கள் எவ்வாறு இருந்தது என்று பலருக்கும் இன்று மறந்து விட்டது. கொழும்பில் உள்ள குப்பை மேடுகளை அகற்றி, நிரப்பப்பட்டிருந்த தாழ் நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்து கொழும்பை பசுமை நகரமாக மாற்றினோம். இம் முன்னேற்றம் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு
ஆறுகளை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் உலக நீர் தினத்திற்கு இணையாக இன்று (22) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புண்ணிய நகரில் மாணிக்ககங்கைக்கு அருகில் ஆரம்பித்து வைத்தபோதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
மாணிக்க கங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக ஒன்று சேர்க்கும் இடம், கதிர்காம புண்ணிய பூமியில் பொலித்தீன் மலர் மாலைகளுக்கு பதிலாக இயற்கையான மலர் மாலைகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யும் மலர் மாலைகளை அறிமுகம் செய்யும் நிகழ்வும் இந்நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு பொருட்களையும் சிறு துண்டுகளாக ஆக்கக்கூடிய இயந்திரத்தை மொனராகலை மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் “சொபாகெத்த” சஞ்சிகை மற்றும் “மிகிமடல” பத்திரிகையின் பிரதிகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாட்டினால் எமது வளிமண்டலம் மாசடைந்தாலும், துரதிஷ்டவசமாக அதன் பிரதிகூலங்களினால் அதிகமாக பாதிப்படைவது அபிவிருத்தி அடைந்து வருகின்ற எமது நாடு போன்ற நாடுகளே. இன்று பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதாக எமது எதிர்த் தரப்பினர் முழு உலகத்திற்கும் காட்ட முயற்சி செய்கின்றனர். “கிராமத்துடன் கலந்துரையாடல்” போன்ற கிராமியமட்ட நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ளும் எனக்கு அப்பாவி விவசாயிகள் முகங்கொடுத்துவரும் பல்வேறு துன்பங்களை தெளிவாக காண முடிகின்றது. அவர்களின் வாழ்வு ஒரு போராட்டமாகவே காணப்படுகின்றது. அவ்வாறானவர்களுக்கு பயிர்ச் செய்கைகளுக்காக காணி ஒன்றை வழங்கும் நடவடிக்கையை தவறான கருத்துக்களை முன்வைத்து காடுகளை அழிக்கும் வகையில் நாம் செயற்படுகிறோம் என்று எதிர்த் தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பொய்யான, மனிதாபிமானமற்ற பிரச்சாரம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட ருச மரக்கட்டைகளை காட்டி அவற்றை சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து எமது இந்த விவசாய செய்கைக்கு காடுகள் அழிக்கப்படுவதாக தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் மூலம் உண்மையான நிலைமையை மாற்றியமைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட “சுரக்கிமு கங்கா” தேசிய சுற்றாடல் நிகழ்ச்சி எதிர்கால சந்ததியினருக்காக நாம் அனைவரும் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, மாவட்ட, பிரதேச மட்டங்களில் இச்செயற்பாட்டினை மாவட்ட, பிரதேச செயலாளர்கள் முன்னெடுக்க வேண்டுமென்பதை தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தவிசாளர் எஸ்.அமரசிங்க ஆகியோர் இவ் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினர்.
மகா சங்கத்தினர், ஊவா மகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.பீ.ஹேமந்த ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்கள் கிரிவெஹர ரஜமகா விகாராதிபதி, ருகுனு மாகம்பத்துவே பிரதான சங்க நாயக்கர் சங்கைக்குரிய கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கதிர்காம அபிநவாராமாதிபதி ருகுனு மாதம்பத்துவே பிரதான நீதிமன்ற சங்க நாயக்கர் சங்கைக்குரிய கப்புகம சரணதிஸ்ஸ நாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்தார்.
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு

east tamil

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

Leave a Comment