26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
மலையகம்

ஓல்டுபீகொக் தோட்ட கோமந்துரை சிவன் ஆலயத்தில் சிவலிங்க பிரதிஷ்டை வெகு விரைவில்

புஸ்ஸலாவ இரட்டை பாதை நியூவ்பீகொக் குரூப் ஓல்டுபீகொக் தோட்டத்தில் 1952 ஆம் ஆண்டு கட்டபட்ட “கோமந்துரை” சிவன் ஆலயம் பின் புனர் நிர்மாணம் காரணமாக கடந்த 30 வருடங்களாக கும்பாபிஷேகம் நடாத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இவ்வேளையில் இதனை புனர்நிர்மாணம் செய்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மேலும் இவருடன் பிள்ளையார் அம்மன் ராமர் முருகன் சிலைகளும் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ளன.

இந்த தெய்வ திருப்பணிக்கு உதவ கூடியவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இந்த திருப்பணிக்கு தோட்ட மக்களும் இளைஞர்களும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர் இவர்களுக்கு நாமும் கைகொடுப்போம்.

இந்த ஆலயத்தின் வரலாறு தொடர்பில் ஆலயத்தை அமைத்த வெள்ளைசாமி என்கிற சிதம்பரம் அவர்களின் மகன் மயில்வாகனம் என்கின்ற தவசுப்ரபாதம் இந்தியா தென்காசியில் இருந்து இவ்வாறு கூறுகின்றார்…

தமிழ் நாட்டில் இருந்து தென்காசி ஊரிலே இருந்து வெள்ளைசாமி என்கிற சிதம்பரம் அவர் மகன் மயில்வாகனம் என்கிற தவசுப்ரபாதம் என்ற பெயரில் தற்போது தமிழ் நாட்டில் வசித்து வருகிறேன்

என் தந்தை நியூவ் பீகொக் குரூப் ஓல்டு பீகொக் டிவிஷனில் 1952 ம் ஆண்டு சிவாலயம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினார் சிவலிங்கத்தை உருவமாக வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் ஆலயமானது பெரிய அளவில் வெள்ளைசாமி என்கிற சிதம்பரம் அவர் சொந்த செலவில் சிவாலயம் கட்டி சிவலிங்கத்தை உருவமாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது.

எனது தகப்பனார் 1945 ஆண்டு இந்திய நாட்டில் இராணுவ வீரராக பணியில் ஈடுபட்டு வரும் வேயில் இமயமலை சென்று தியானம் செய்த போது அந்த மலையில் தவம் செய்து வந்த கோமந்துரையார் என்ற பெயரில் ஒரு முனிவர் இவரிடம் ஐந்து கொம்பு அமைந்த பெரிய சங்கு இவருக்கு வழங்கி ஆசீர்வாதம் செய்து உள்ளார் அந்த பெயரை வைத்து கோமந்துரை என்ற பெயரில் சிவாலயம் இலங்கையில் உள்ள நியூவ் பீகொக் குரூப் ஓல்டுபீகொக் டிவிஷன் என்று பெயரிடப்பட்ட தேயிலை தோட்டத் த்தில் சிவாலயம் கட்டப்பட்டது

காலஞ்சென்ற திரு வெள்ளைசாமி என்கிற சிதம்பரம் அவர் கோமந்துரை என்ற பெயரில் ஒரு சிவலிங்கத்தை உருவமாக வைத்துஇ அருகே கிருஷ்ணர் சிலை மற்றும் முருகன் சிலை செய்து வைத்து வழிபட்டு வந்தார்கள் அந்த சிவலிங்கத்தை உருவமாக வைத்து கட்டப்பட்ட நிலையில் ஆலயத்தை நிர்வாகம் நடவடிக்கை இடித்து விட்டதாக செய்திகள் வெளியாகின

அந்த ஆலயத்தை கட்டியவர் பிறந்த நாள் 26-03-1911 மறைந்த நாள் ஆங்கில தேதி 19 – 01-1964 தமிழ் வருடம் சோபகிருது வருடம் தமிழ் தேதி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடிந்தால் திங்கள்கிழமை காலை 2 மணிக்கு கண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிகிறது

திங்கள்கிழமை உடல் சந்தனப் பெட்டியில் கண்டியிலிருந்து நியூவ் பீகொக் குரூப் ஓல்டு பீகொக் டிவிஷன் என்று பெயரிடப்பட்ட தேயிலை தோட்டத்தில் அவர் இல்லத்தில் வைத்து பஜனை பாடல்கள் மக்கள் பாடினார்கள் மறுநாள் 20 ம் தேதி செவ்வாய் கிழமை ஆகவே உடல் அடக்கம் செய்ய மக்கள் அனைவரும் தடை செய்து விட்டனராம் அதன் பிறகு மறுநாளே புதன்கிழமை 22-01-1964 காலையில் உடல் ஐந்து தலை நாகம் மூங்கில் மரங்கள் வெட்டி பாடையை அந்த ஊரில் உள்ள முனியாண்டி என்பவர் இறப்பதற்கு முன் அவரிடம் காலஞ்சென்ற வெள்ளைசாமி என்கிற சிதம்பரம் அவர் கூறினார் அதை தொடர்ந்து மாரிமுத்து பத்தர் அந்த ஊரிலே தீக்குழி வருடா வருடம் தீமிதி விழா கொண்டாடும் அவரிடம் மற்றும் பொன்னம்பலம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தான் இறந்த பிறகு புதைக்க வேண்டிய இடம் தான் கட்டிய சிவலிங்கம் ஆலயத்திற்கு எதிரிலேயே சமாதி புதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர் விருப்பப்படி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக பஜனை ஊர்வலம் நடைபெற்றது உடல் 21 – 01-1964 ல் அடக்கம் செய்யப்பட்டது என்பது தான் உண்மை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

கண்டியில் வாகன விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு

east tamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

Leave a Comment