Pagetamil
இலங்கை

இன்று முதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம்!

இன்று முதல் மேலும் பட்டதாரிகள் 10,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 60ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லாட்சியில் நியமனம் வழங்கப்பட்ட 14ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேரை நிரந்தர சேவையில் இணைக்க இன்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா தொற்றினால் அவர்களை அரச சேவைக்கு இணைக்கும் பணி தாமதமானது.

அவர்களின் ஆவணங்களை பெற்று நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.மாவட்ட செயலாளர் அலுவலக மட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்படும்.இவர்களின் பெயர்ப்பட்டியல் அமைச்சு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!