அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சிட்னி நகர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு பின் warragamba அணை நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் நள்ளிரவில் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிகொண்டவர்களை மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர்.



