கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிக்கையொன்றின் கிழக்கு மாகாண விநியோக வாகனம் கோட்டைக்கல்லாறு ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்கள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை நான்கு மணியளவில் இடம் பெற்ற மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கொழும்பில் இருந்து பத்திரிக்கைகளை ஏற்றிக் கொண்டு விற்பனை நிலையங்களுக்கு விநியோயங்களை மேற்கொண்டு வந்த நிலையில் இறுதியாக களுவாஞ்சிகுடி விற்பனை நிலையத்திற்கு வினியோகத்தினை மேற்கொண்டு விட்டு புறப்பட்டு சற்று நேரத்தில் கோட்டக்கல்லாற்று பலத்தில் விபத்து இடம் பெற்றுள்ளது.
மேற்படி பலத்தினால் சென்று கொண்டிருக்கும் போது நாய் குறுக்கிட்டதன் காரணத்தினால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பால வேலியையும் உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமாக எவ்வித ஆபத்துக்கள் இன்றி உயிர் தப்பியதுடன் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது. வாகனத்தை கரைசேர்க்கும் நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பழுகாமம் நிருபர்-