Pagetamil
கிழக்கு

புதையல் தோண்டிய 8 பேர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது கண்டி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ரத்னபுர, வெலிக்கந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எட்டு நபர்களும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பூசைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் ஆயுதப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று எனது தலைமையில் செயற்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

வெருகலில் மீண்டும் பௌத்தமயமாக்கல், அருணின் பதில் என்ன?

east tamil

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

Leave a Comment