வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!

Date:

வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து கைக்குண்டு ஒன்றினை ஓமந்தை பொலிசார் இன்றையதினம் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று (20) மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட போது குறித்த காணியில் கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

பின்னர் குறித்த விடயம் ஓமந்தை பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டபின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு வெடிபொருட்கள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்