உலகின் பல்வேறு நாடுகளில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் செயலிகள் முடங்கியதால், பயனர்கள் அவதிக்குள்ளாயினர்.
முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வட்ஸ்அப், நேற்றிரவு 10.30 மணியளவில் திடீரென முடங்கியது. அதைத்தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவையும் செயல்படவில்லை.
உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் வட்ஸ்அப், திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாற முடியாமல் பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டபின், சுமார் 45 நிமிடங்கள் கழித்து வட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கின.
இதுகுறித்து ருவிற்றரில் பதிவிட்ட வட்ஸ்அப் நிறுவனம், அமைதியுடன், பொறுமையுடன் காத்திருந்த பயனாளர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1