ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தோனந்தா, இன்று (20) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். இதற்கான அழைப்பை சில தினங்களின் முன்னர் அவர் விடுத்திருந்தார்.
“ என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண வேண்டுமென கூறினார். இந்த பிரச்சனையை இப்படியே இழுபட விடாமல் ஒரு தீர்வை காண அவர் விரும்பும் சந்தர்ப்பத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுத்தேர்தலிற்கு முன்னரேயே இந்த முயற்சியை நான் மேற்கொண்டேன். ஆனால் தொடர முடியவில்லை. உடனடியாக தீர்வு காண வேண்டிய மனிதாபிமான பிரச்சனையாக இதை பார்க்கிறேன். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வேலைத்திட்டத்துடன் தன்னை வந்து சந்திக்கும்படி ஜனாதிபதி கேட்டுள்ளார்.“ என தமிழ்பக்கத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இயங்கும் இரண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் ஒன்று மாத்திரமே இந்த அழைப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது.
அன்று, யாழப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது.