மேலும் 6 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளது.

இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையிலிருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதுஹும்பொல பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 17ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதன நோய் நிலை மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிக்கலான கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 96 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த மார்ச் 14ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிக்கலான கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிக்கலான கொவிட்-19 தொற்று, உக்கிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிக்கலான கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்