முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சமர்ப்பிப்புகளை செய்யுமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பாக அவர் பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு தலைமை நீதிவான் புத்த ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
செப்டம்பர் 10 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1