தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள எம்.ஏ.சுமந்திரன் குழுவினர், நாளை மறுநாள் ஆதரவாளர்களை திரட்டி கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை வேந்தன் கல்லூரியில் இந்த சந்திப்பு நடக்கிறது.
இதில் சுமந்திரன் அணி பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாணக்கிய ராகுல ராஜபுத்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
விரைவில் மாகாணசபை தேர்தல் நடக்கவுள்ளதால், தமது அணி ஆதரவை பெருக்கும் விதமாக தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாணக்கிய ராகுல ராஜபுத்திரன், சில நாட்கள் யாழில் தங்கியிருந்து சுமந்திரன் ஆதரவாளர்களிற்காக பிரச்சாரங்களிலும் ஈடுபடவுள்ளார்.
வரும் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கும் அவர் முன்னிலையாகுவார். அதற்காக வரும் சமயத்தில் இந்த பிரச்சார நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.