மஸ்கெலியாவில் உள்ள ஒரு இந்து ஆலயமொன்றின் பூசகர் உட்பட நான்கு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆலயத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் நரேந்திரன் தெரிவித்தார்.
ஆலயத்தில் நடந்த கூட்டமொன்றில் பங்குபற்றிய நிலையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நகரத்தை சேர்ந்த இருவரும் இவர்களில் அடங்குகிறார்கள்.
தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியாவில் இதுவரை 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.