பங்களாதேஷ் பறந்தார்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) காலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷுக்கு புறப்பட்டார்.

பங்களாதேஷ் தேச தந்தை, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா, பங்களாதேஷின் சுதந்திரதின் பொன்விழா ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிரதமர் பங்களாதேஷ் பயணமாகிறார்.

அனைத்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ராஜபக்ஷ, இந்த பயணத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா, ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், அத்துடன் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கி ஆளுநருடன் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.

விவசாயம், தொழில்நுட்ப கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.

பிரதமர் ராஜபக்ஷ தலைமையிலான குழு நாளை இரவு இலங்கைக்கு திரும்பும்.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்