தாக்கல் செய்துள்ள நடிகை குஷ்பு தனது அசையும், அசையா சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
குஷ்பு, தன் பெயரில், 18 கோடி ரூபாயில் அசையா சொத்துக்கள் உள்ளன. பார்ச்சூனர் டொயோட்டா கார், மாருதி ஸ்விப்ட் கார், 8.55 கிலோ தங்க நகைகள், 78 கிலோ வெள்ளி பொருட்கள் என, 4.55 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் என, மொத்தம், 22.55 கோடி சொத்துக்கள் உள்ளன.
கணவர் சுந்தர் சி பெயரில், 16.57 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், பி.எம்.டபிள்யு கார், டொயோட்டா கேம்ரி கார், கியா சொனெட் கார், 495 கிராம் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள் என, 1.84 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன.
கணவர் பெயரில், மொத்தம், 18.41 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.குஷ்பு பெயரில், 3.45 கோடி ரூபாய்; கணவர் பெயரில், 55.55 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. தான் எட்டாம் வகுப்பு வரை படித்ததாக, குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.