நீர்கொழும்பு தமிழ் யுவதியை பல வருடங்களாக மிரட்டி வல்லுறவு கொண்டதாக சந்தேகிக்கப்படும் சுற்றுலா விடுதியின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (17) அவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, நீதிபதி என்.எல்.மஹாவத்த, சந்தேக நபரை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
24 வயதுடைய யுவதியொருவரே தறகொலை செய்து கொண்டார்.
நீர்கொழும்பு, குடாப்பாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சிறிலால் பெர்னாண்டோ ஹொட்டல் மற்றும் ட்ரோலர் உரிமையாளர். 4 பிள்ளைகளின் தந்தையான 50 வயது தொழிலதிபர், யுவதியொருவருடன் 10 வருடமாக பாலியல் உறவு கொண்டு, அதை படம் பிடித்து வைத்துள்ளார்.
14 வயதில் அறியாத வயதில் அவருடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ படம் பிடித்து, அதை வைத்தே 10 வருடமாக மிரட்டி யுவதியுடன் உறவு கொண்டுள்ளார். இந்த மனஅழுத்தம் தாங்க முடியாமல் யுவதி தற்கொலை கொண்டதாக கூறப்பட்டது.
அவர் தற்கொலை செய்த போது எழுதிய கடிதத்தை உள்ளாடைக்குள் வைத்திருந்தார். அதில் சிறிலால் பெர்னாண்டோவின் பெயரை தெளிவாக எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், பல ஆண்டுகளாக சந்தேக நபருடன் பாலியல் உறவு கொண்டிருந்ததாகவும், வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக தனது தொழிலதிபர் மிரட்டியதால் தான் உயிர் இழந்ததாகவும் கூறியிருந்தார்.
14 வயது சிறுமியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதன் பாரதூர தன்மையை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
எனினும், சிறீலால் பெர்னாண்டோ, யுவதியை 14 ஆண்டுகளாக அறிந்திருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவர் அவளுடன் எந்தவிதமான பாலியல் உறவையும் கொண்டிருக்கவில்லை, குறைந்தபட்சம் யுவதியின் கையைகூட தொடவில்லை என்றும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
யுவதியின் பிரேத பரிசோதனையில் அவர் நீண்ட காலமாக உடலுறவு கொண்டிருந்தது தெரியவந்தது.
சந்தேக நபரான சிறிலால் பெர்னாண்டோ நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். அவரது மூத்த மகளுக்கு 21 வயது என்பது குறிப்பிடத்தக்கது.