இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளில் இருந்து துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இன்று (19) உத்தரவிட்டார்.
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
2010 முதல் 2014 வரை அமைச்சராக பணியாற்றியபோது 412 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக ரோஹித அபேகுணவர்தன மீது கடந்த அரசாங்கத்தின் போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1