ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு திங்களன்று நடக்கவுள்ளது.
இங்கிலாந்து, கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்படும் இந்த தீர்மானம், அரசியல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நமது நாட்டின் உள் விவகாரங்கள் மீது குற்றம் சாட்டுவது அல்லது வாக்களிப்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு அல்ல என்று அமைச்சர் தெரிவித்தார்.
“பல ஆண்டுகளாக, நம் நாட்டிற்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எங்கள் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை தோற்கடிக்க முயற்சிக்கிறோம். பல நட்பு நாடுகள் இதில் எங்களுடன் கைகோர்த்துள்ளன. இம்முறை இந்தியாவும் எங்களுடன் கைகோர்க்கும் என்று நம்புகிறோம்“ என்றார்.