உலக நீர் தினத்தை முன்னிட்டு புஸ்ஸலாவையில் நீர் வளத்தை காக்கும் செயற்திட்டம்

Date:

எதிர்வரும் 22 ஆம் திகதி உலக நீர் தினம் உலகளாவிய ரீதில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இருந்து கம்பளை பிரதேசத்திற்கு நீரினை பெற்றுக் கொள்ளளும் நீரேந்து பிரதேசங்களை பாதுகாக்கும் பொருட்டு பிரதான நீரேந்து பிரதேசங்களில் பயன் தரும் மரங்கள் நாட்டும் செயற்திட்டம் இன்று (18) ஆரம்பிக்கப்பட்டது.

கம்பளை மரியாவத்தை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் கம்பளை பிரதான பொலிஸ் உதவி அத்தியட்சகர் பிரியந்த கம்பளை பிரதேச் செயலாளர் திருமதி என். தென்னகோன் மத்திய மாகாண தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் என்.மீகொட¸ எஸ் பிரியந்த¸ ஏ.ஜயவர்தன¸ எஸ்.குமார¸ எஸ்.எட்டியராச்சி தோட்ட அதிகாரி நுவான் விஜேசிங்க புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மற்றும் பிரதேச கிராமசேவகர்கள்; சுகாதா அதிகாரிகள் கம்பளை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

செயற்திட்டத்தில் முதற் கட்டமாக புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி சப்லி சோகம தோட்ட பகுதியில் நீரேந்து பகுதியில் பயன் தரும் பல விதமான மரங்கள் நாட்டப்பட்டதுடன் மண் அரிப்பை தடைசெய்யும் மூங்கில் மரங்களும் நாட்டப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்