முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பாரிய ஒரு குளமாகவும் அதன் கீழான பல ஏக்கர் விவசாய செய்களையும் கொண்ட முத்துஐயன்கட்டு பிரதேசத்திலே முத்து விநாயகபுரம் பகுதியில் நிலக்கடலை செய்கையாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு என புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதற்காக நேற்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே வந்திருந்தார்
உலக உணவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முத்துஐயன்கட்டு பிரதேசத்திலே முத்து விநாயகபுரம் பகுதியில் நிலக்கடலை செய்கையாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு என புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மாலை 4.30 மணியளவில் திறந்து வைத்தார்
நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் விவசாய அமைச்சின் அதிகாரிகள் வடமாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
மாலை முத்து விநயகபுரம் பகுதிக்கு வந்த விவசாய அமைச்சர் குறித்த கட்டிடத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விவசாயிகளின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன்போது விவசாயிகள் தங்களுடைய குளமானது உப உணவுச் செய்ககைக்கானது எனவும் தற்போது அதனுடைய நோக்கங்கள் மாறி நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த உப உணவு செய்கையை மேற்கொள்வதற்கு தமக்கு பாரிய இடர்பாடுகள் ஆக குளத்தின் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமை ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அமைச்சரிடம் முன்வைத்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் விடயத்தை கேட்டறிந்து கொண்டு அதற்கு தேவையான பணத்தினை உடனடியாக பெற்றுத் தருவதாகவும் இந்த திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறித்த பிரதேசத்தில் உப உணவு செய்கையை ஊக்குவிக்கவும் மிளகாய் செய்கையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடுகளை செய்வதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வதாக விவசாயிகள் மத்தியில் உறுதியளித்திருந்தார்.
அத்தோடு விவசாயிகளால் கூறப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் அதனை சீர் செய்து தருவதாகவும் உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார்.
இங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரதேசமானது இந்த நாட்டினுடைய அனைத்து பாகங்களுக்கும் மிளகாய் உற்பத்திகளை உற்பத்தி செய்து அனுப்பிய ஒரு இடமாக காணப்பட்டது. அரசாங்கத்தினுடைய சலுகைகள் நன்மைகள் கிடைக்காத காரணத்தினால் இந்த திட்டங்களை முன்னெடுத்த விவசாயிகள் இன்று விவசாயத்திலிருந்து நெற்செய்கைக்கு மாற்றியுள்ளனர்.
இன்று ஆயிரம் ஏக்கரில் மிளகாய் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். குளத்தில் இருந்து வருகின்ற வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு தரப்படுகின்ற பட்சத்தில் தாங்கள் மீண்டும் அந்த மிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் 200 மில்லியன் ரூபாய்களை நாங்கள்வழங்குகிறோம். அதனூடாக இங்கு கிடைக்கின்ற மிளகாய் உற்பத்தி களிலிருந்து தென்பகுதிக்கான மிளகாய் உற்பத்திகளை அனுப்புவதற்காக இருக்கின்றனர். அந்த வகையிலே அவர்களுக்கு தேவையான அந்த உதவிகளைச் செய்து ஆயிரம் ஏக்கரில் மிளகாய் செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.