26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தம்!

புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரதங்களை இயக்கும் போது இடம்பெறும் செயல்பாட்டு பிழைகள் காரணமாக ஊழியர்களிடமிருந்து இழப்பீடுகளை அறவிட அரசாங்கம் எடுத்த முடிவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுர பீரிஸ் தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியளிக்காததால் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊழியர்களின் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வேறு ஊழியர்களை பயன்படுத்தி அலுவலக புகையிரதங்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பிரதான மார்க்கத்தில் ஐந்து அலுவலக புகையிரதகங்களையும் கடலோர மார்க்கத்தில் 4 அலுவலக புகையிரதங்களையும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய மார்க்கங்களில் இரண்டு அலுவலக புகையிரதங்கள் வீதம் இயக்கப்பட உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 அலுவலக புகையிரதங்களை தவிர ஏனைய அனைத்து செவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் ஆரம்பித்த வேலைநிறுத்தம் திடீரென நிறுத்தப்பட்டது. ஆனால், நள்ளிரவில் மீண்டும் வேலைநிறுத்தம் ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

Leave a Comment