இலங்கை மீன்பிடி ப்குகள் 6ஐ கைப்பற்றியுள்ள இந்திய கடலோர காவல்படை, அதிலிருந்த 30 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக பலநாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
இலங்கை ரோலர்கள் அரேபிய கடலில் மீன் பிடிப்பதாகவும், எல்லையில் உள்ள சர்வதேச கப்பல் பாதை வழியாக இலங்கைக்கு திரும்புவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்திய கடலோர காவல்படை போதைப்பொருளைத் தேடுவதாகக் கூறி ரோலர்களை தடுத்து நிறுத்துகிறது என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, பிடிக்கப்பட்ட மீன் பழுதடைவது, எரிபொருள் சேமிப்பபு தீர்வது, மீனவர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவது நிகழ்வதாக குறிப்பிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1