கிணற்றில் விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பலி!

Date:

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச் சேர்ந்த முன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான உதயராஜ் ஹம்சவர்த்தினி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் வழமை போல் நேற்று (16) விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தனது விளையாட்டுப் பொருள் கிணற்றில் விழ்ந்ததைக் கண்டு அதனை எடுக்க முற்பட்டபோது தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து, குழந்தையை கிணற்றிலிருந்து மீட்ட தந்தை, களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்து சிகிச்சையழிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் க.ஜீவராணி உத்தரவுக்கமைவாக களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்